மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா?

0
129
Supreme Court time for the central government! An attack on temples?
Supreme Court time for the central government! An attack on temples?

மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்! தேவலாயங்கள் மீது தாக்குதலா?

கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய பூனாவாலா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெறுப்புணர்வு சம்பவம் குறித்து நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு நிகரான மூத்த அதிகாரிகள் மூலம் விசாரித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர்.

மேலும் அந்த சம்பவத்தினால் பாதிப்படைந்த தேவலாயங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியது. அதனை தொடர்ந்து நாட்டில் தேவாலயங்கள் மற்றும் பாதிரியார்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன எனவும் தேசிய பூனாவாலா வழக்கின்  போது உச்ச நீதிமன்றம் வகுத்து அந்த வழிகாட்டுதல்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி ஓய் சந்திர சூப் ஜே பி பார்த்திபாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னாக நேற்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் கோளின் கோன்சால்வேஸ் மனுதாரரின் தரப்பில் வாதாடினார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு 500க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் மீது நடந்தது என்று பதிவு செய்தார்.

மேலும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர்  ஜெனெரல் துஷார்   மேத்தா மனு தொடர்பாக மத்திய அரசின் ஆரம்பகட்ட பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் அந்த கோரிக்கைக்கு அனுமதி அளித்த நீதிபதிகள் மனு தொடர்பான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

author avatar
Parthipan K