சுருக்குமடிவலை விவகாரம்! மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்களின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்! 

0
176
#image_title

சுருக்குமடிவலை விவகாரம்! மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்களின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்! 

சுருக்குமடிவலை விவகாரத்தில் 53 மணி நேரம் வரை மீன்பிடிக்க அனுமதி வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின விதியைக்காட்டி, 12 கடல் மைலுக்கு அப்பாலும் மீன்பிடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ். போபன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க சில கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்க இடைக்கால அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், காலை 8 மணிக்கு புறப்பட்டு அதிகபட்சம் மாலை 6 மணிக்குள் இந்த படகுகள் கரை திரும்ப வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சுருக்குமடிவலையை பயன்படுத்தி 53 மணி நேரம் வரை மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்களின் இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரித்தது.

மீனவர்களின் கோரிக்கையை தற்போதைய நிலையில் ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் நிராகரித்தவுடன், படகு பதிவு தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்து மாநில அரசு அல்லது மத்திய அரசு சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தியது.

author avatar
Savitha