சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

0
86

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சென்னை சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைப்பதற்கான தடையை நீக்கக் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

சென்னை டூ சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதை எதிர்த்து விவசாயிகள்,அரசியல் தலைவர்கள் குறிப்பாக தருமபுரி எம்.பி யாக இருந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் தொண்டு நிறுவனம், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் போன்றோர் தொடர்ந்த வழக்கில் 8 வழிச்சாலைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்துத் திட்டச் செயல் இயக்குநர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணையில் இருந்து வருகிறது. தமிழக மக்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த திட்டத்துக்குத் தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால் வேறு மாநிலத்துக்கு மாற்றலாமே என்று யோசனை வழங்கியதுடன் வழக்கை ஜூலை 31ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனையடுத்து ஜூலை 31ஆம் தேதி அன்று 8 வழிச் சாலையின் பயன்கள் தொடர்பாக மத்திய அரசு தங்களுடைய நிலைப்பாட்டை அறிக்கையாகத் தயாரித்து தாக்கல் செய்தது.

இந்நிலையில் இம்மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. மத்திய அரசுத் தரப்பில் சுற்றுச்சூழல் அனுமதி வரும் வரை 8 வழிச் சாலை அமைப்பதற்கான பணியைத் தொடங்கமாட்டோம் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் 8 வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி இவ்வழக்கில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K