Connect with us

Breaking News

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி!

Published

on

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி!

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய தொடங்கியது. இந்நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

Advertisement

ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தலைமையிலான அமா்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதானி – ஹிண்டென்பர்க் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் நீதிபதி ஏம்.எம். சப்ரே தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிப்பதாகவும், இந்த குழுவில் முன்னாள் நீதிபதிகள் ஓ.பி. பட், ஜே.பி. தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்பதால் சிறப்பு நிபுணர் குழு, இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் . விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு, நிதிசார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகி உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

 

Advertisement