உச்சநீதிமன்றத்தின் மனிதாபிமானம்!

0
77

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சரியான ஒத்துழைப்பு தராததால் மேலும், மேலும், இந்த நோய் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதோடு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி உள்ளதால், புதிதாக வரும் நோயாளிகளை மருத்துவமனையில் அரசியலில் வைத்து சிகிச்சை வழங்க இயலாத நிலையில் இந்தியா இருந்து வருகிறது. பல நோயாளிகளுக்கு மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் லேசான அறிகுறிகள் இருந்தால் பக்கத்தில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் லேசான அறிகுறி இருந்தால் மருத்துவமனைகளுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அதோடு தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதும் என்று தெரிவித்திருந்தார்.

அவருடைய இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனையின் நிலையை கண்கூடாக காட்டியது.
இதற்கிடையே டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, போன்ற மாநிலங்களில் முழு ஊரடங்கும் மற்ற சில மாநிலங்களில் இரவு நேர உறக்கம் போடப்பட்டிருக்கிறது.

ஒருபுறம் இந்த தொற்று நோயின் தாக்கத்தினால் மக்கள் துன்பப்படுகிறார்கள், மறுபுறம் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் மருத்துவமனைகள் எல்லாம் நோயாளிகளால் நிரம்பி விட்டபடியால் நோயாளிகள் வெளியே படுத்து சிகிச்சை எடுக்கும் நிலை இருந்து வருகிறது. போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் உண்டாகும் உயிரிழப்புகள் என்று டெல்லியில் நிலைமை மிக மோசமாக இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், டெல்லி மாநில அரசுக்கு கைகொடுக்கும் விதமாக உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.. ஆகவே உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் படுக்கை வசதிகளையும், நோய்த்தொற்று பரிசோதனை வசதிகளையும், உண்டாக்கிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்திருக்கிறார்.

மே மாதம் 7 ஆம் தேதியிலிருந்து உச்சநீதி மன்றத்திற்கு கோடைகால விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறை காலத்தில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நோய் தொற்று சிகிச்சை பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கலாம் என்று மற்ற நீதிபதிகளிடம் ஆலோசனை செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விளக்கமாக உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையை அனைத்து மே மாதம் 14 ஆம் தேதி ஆரம்பமாகும் ஜூன் மாத இறுதியில் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.