தட்டுப்பாடில்லாமல் உரங்களை வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த விவசாயிகள்!

0
62

சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சம்பா தாளடி என்று மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம் சென்ற இரண்டு வருடகாலமாக உரிய சமயத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது காரணமாக, நடப்பு ஆண்டில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது அறுவடை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதேபோல சம்பா சாகுபடிக்கு 230800 பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. சம்பா சாகுபடி பயிர்களுக்கு அடி உரம் தெளிக்க வேண்டிய அவசியத்தில் விவசாயிகள் அனைவரும் இருக்கிறார்கள்..

அதிலும் குறிப்பாக யூரியா, டிஏடி, போட்டாஸ் உள்ளிட்ட விவரங்களை 30 முதல் 40 நாட்கள் வயதுடைய சம்பா பயிர்களுக்கு தெளித்தால் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும் வேளாண் விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மானிய விலையில் அரசு சார்பாக உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. என்ற சூழ்நிலையில், தற்சமயம் உரங்களின் கையிருப்பு மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது.

முதற்கட்டமாக 40 தினங்கள் வயதுடைய சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு அடி உரம் இடுவதற்கு விவசாயிகள் முனைந்திருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில் உரங்களின் தட்டுப்பாடு விவசாயிகளை கவலை அடையச் செய்திருக்கிறது. உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது ஆகவே தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.