அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்டம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
90
Superstar rajini's annatha film going to be completed
Superstar rajini's annatha film going to be completed

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்டம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.இந்த திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்தத் திரைப்படத்தில் மீனா,குஷ்பூ,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

ஜெகபதிபாபு,பிரகாஷ்ராஜ்,சூரி,சதீஷ்,ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடிக்கின்றனர்.டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.தர்பார் திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் இதுவாகும்.முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.அதன் பின்னர் ஹைதராபாத்திலும் பின்னர் மேற்கு வங்கத்திலும் பின்னர் லக்னோவிலும் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டது.

தற்போது அடுத்த கட்டம் மற்றும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பானது கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது.இந்த படப்பிடிப்பானது இந்த மாதம் 21ம் தேதி தொடங்குகிறது.இந்த மாதம் 27ம் தேதி வரை இந்த படப்பிடிப்பு நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் அண்ணாத்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைகிறது.இதனையடுத்து தொழில்நுட்பப் பணிகள் நடக்கும் எனத் தெரிகிறது.மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்த படத்தில் ரஜினிக்காக அறிமுகப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

மேலும் அண்ணாத்தத் திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியாவதால் படத்தின் அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.நடிகர் ரஜினி தனது பகுதியை நடித்து முடித்துக்கொடுத்து விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே மற்ற நடிகர்,நடிகைகள் நடிக்கும் பகுதிகள் இன்னும் இருப்பதாகத் தெரிகிறது.சிறுத்தை சிவா முதல் முறையாக நடிகர் ரஜினியுடன் பணிபுரிகிறார்.மேலும் டி.இமானும் ரஜினிக்கு முதல் முறையாக இசையமைக்கிறார்.

author avatar
Parthipan K