பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்!

0
89
School Students

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் அனைத்தும்  நடப்பட்டது.தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.ஆனால் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி உள்ளது.

பள்ளி தொடங்கியதில் இருந்தே பள்ளி கல்வித்துறை ஏராளமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.அதில் முதலாவதாக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் என்னும் எழுத்தும்,ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற பல்வேறு வகையான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது.மேலும் தற்போது அரசு பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டுவரும் நோக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நடனம்,பேச்சுப்போட்டி,ஓவியம் மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.கடந்த நவம்பர் மாதம் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை உள்ள மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த கட்ட போட்டி மாநில அளவில் கடந்த 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை நடைப்பெறும் என தெரிவித்துள்ளனர்.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முதல் மதுரை மாவட்டத்திலும்,ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோவையிலும்,பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு சென்னையிலும் இந்த போட்டிகள் நடைபெறுகின்றனர்.இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் அவரவர்களின் பள்ளி தலைமை ஆசிரியருடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K