பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்! இந்தப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்!

0
83

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்! இந்தப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்!

தற்போது எந்த வயதினருக்கும் கண் பிரச்சனை என்பது வரக்கூடிய ஒன்றாக மாறி வருகிறது. ஒரு சிலருக்கு எப்பொழுது பார்த்தாலும் கண் வறண்ட நிலையிலே இருப்பதினால் கண் எரிச்சல், மங்கலான பார்வை, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதனால் கண் பார்வை குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. கண்பார்வைகளை சரி செய்யக்கூடிய பொருட்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

விட்டமின் ஏ அதிகம் கொண்ட முருங்கைக்கீரை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வை குறைபாடு நீங்கும். ஆளி விதைகள் மற்றும் வால்நட்டை இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஊற வைத்து காலையில் எழுந்து சாப்பிட்டு வர பார்வை குறைபாடு முற்றிலும் நீங்கும்.

காலையிலிருந்து மாலை வரை கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு கண் வறட்சி ஏற்படும். அதனை சரி செய்ய உதவுவது வால்நட். வால்நட்டை எப்பொழுதும் நாம் ஊறவைத்து தான் சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் நாம் இரண்டு அல்லது மூன்று வாழ்நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொண்டால் பார்வை குறைபாடு நீங்கும்.

 

author avatar
Parthipan K