திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு

0
118

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு

நாடக காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி என்ன? அதன் பின்னால் நடக்கும் அரசியல் என்ன என்பது பற்றி வட சென்னையில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்த முறைகேடான பதிவு திருமண வழக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் திரௌபதி. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வாழும் பல்வேறு தரப்பட்ட மக்களின் நிஜ வாழ்க்கையுடன் ஒன்றிணைந்துள்ளதால் படத்திற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

பெரும்பாலான இடங்களில் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வருவதால் திரையரங்கு நிரம்பி வழிகிறது. பெரிய நடிகர்களுக்கு கொடுப்பதைப் போன்ற முக்கியத்துவம் இந்த படத்திற்கும் கொடுத்துள்ள இளைஞர்கள் பெரும்பாலான பகுதிகளில் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். திரையிட்ட எல்லா இடங்களிலும் வசூல் சாதனையையும் இந்த திரௌபதி திரைப்படம் நிகழ்த்தி வருகிறது.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன்.ஜி அவர்களின் இரண்டாம் படைப்பான வெளியான இந்த படத்தில் ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் மற்றும் டூ லெட் பட கதாநாயகி ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த ஜூபின் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இவர்களுடன் நடிகர் கருணாஸ்,மறுமலர்ச்சி படத்தின் இயக்குனர் பாரதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவ்வாறு குறைத்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரௌபதி படத்திற்கு தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவது தமிழ் திரையுலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த திரௌபதி படத்திற்கு கிடைத்த வரவேற்பை புரிந்து கொண்ட பிரபலங்கள் இந்த படத்தின் இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மோகன்.ஜி அவர்களின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து விசாரிக்கையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து முதல்கட்ட பேச்சு வார்த்தை மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும், உறுதியாகும் பட்சத்தில் இது குறித்து அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

author avatar
Ammasi Manickam