இந்த இரு அணிகள்தான் இறுதிப்போட்டியில்… ஒன்னு ஆஸ்திரேலியே… இன்னொன்னு?- கவாஸ்கர் ஆருடம்!

0
128

இந்த இரு அணிகள்தான் இறுதிப்போட்டியில்… ஒன்னு ஆஸ்திரேலியே… இன்னொன்னு?- கவாஸ்கர் ஆருடம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் டி 20 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்கு செல்லும் அணிகள் குறித்து பேசியுள்ளார்.

அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாமல் போனது.

இந்நிலையில் இந்த ஆண்டும் முதல் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. இந்நிலையில் சுனில் கவாஸ்கர் இதுகுறித்து பேசும் போது “இந்தியா கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்னொரு அணியாக ஆஸ்திரேலியா செல்லும். ஏனென்றால் இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும்” எனக் கூறியுள்ளார். இந்த தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் மிகவும் வலுவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசியுள்ள் கவாஸ்கர் “இந்திய அணியில் ரிஷப் பண்ட் போன்ற ஒரு திறமையான இடதுகை பேட்ஸ்மேன் இருக்கும்போது நீங்கள் அவரைதான் அணியில் எடுக்க வேண்டும். ஏனென்றால் இடதுகை பேட்ஸ்மேன் இருந்தால்தான் எதிரணி பந்துவீச்சாளர் குழம்புவார். கேப்டனும் அனைத்து டிகிரியிலும் பீல்டர்களை நிறுத்தி குழம்பிவிடுவார். இடது கை பேட்ஸ்மேன் அணியில் இருப்பது கூடுதல் பலமாக அமையும்” எனக் கூறியுள்ளார்.