பிரதமர் வருகை கேரளாவில் தற்கொலைப்படை தாக்குதல்! உச்சகட்ட பாதுகாப்பு 

0
194
#image_title
பிரதமர் வருகை கேரளாவில் தற்கொலைப்படை தாக்குதல்! உச்சகட்ட பாதுகாப்பு
பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 24-ம் தேதி கேரளாவில் முதன் முறையாக வந்தேபாரத் ரயிலை துவக்கி வைப்பதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்க்கும் வருகை தர உள்ளாதால் அம்மாநில பாஜகவினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநில பாஜக அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கேரள வருகையை எதிர்த்து தற்கொலை தாக்குதல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தை அனுப்பியவர் பெயர், முகவரி அதில் உள்ளதால் அம்மாநில போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிரட்டல் கடிதத்தில் உள்ள முகவரியின் பெயரில் உள்ள நபரை விசாரிக்கும் போது, தனக்கும் அந்த கடிதத்திற்க்கும் சம்பந்தம் இல்லை எனவும், தன்னுடைய எதிரிகள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றதாக கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த கடிதத்தை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என்பதால் மத்திய குற்றபுலனாய்வு துறையின் உதவியை கேட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உள்ள அமைப்புகளால் பிரதமருக்கு எதிர்ப்பு இருப்பதாகவும், எனினும் திட்டமிட்டபடி பிரதமரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் என கேரள காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
இதனை தொடர்ந்து கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமரின் கேரள வருகை, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உத்வேகம் அளிக்கும். மக்களிடம் பிரதமரின் வருகை குறித்த பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பிரதமர் மோடி சாலையோர நிகழ்வுகளை நடத்துவார். மக்கள் தாமாக முன்வந்து அவரை வரவேற்பர். யுவம் மாநாடு கேரளாவில் ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும். அரசியலுக்கு அப்பாற்பட்டு கேரளாவின் வளர்ச்சியை வளரும் இளைஞர்கள் அனைவரும் பிரதமரின் நிகழ்ச்சியில கலந்து கொள்ள வேண்டும் என்றார்.