திடீரென உள்வாங்கிய கடல் நீர்!! சுனாமி ஏற்படுமா என அப்பகுதி மக்கள் அச்சம் !!

0
90

இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக் கடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐம்பது அடிக்கும் மேலாக கடல் உள்வாங்கி இருப்பதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் தன்மை மாற்றமடைந்து இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கடல் திடீரென உள்வாங்கியது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

இரவு முழுவதும் கடல் உள்வாங்கிய படியே இருந்ததாகவும் ,திருவள்ளுவர் சிலை இருக்கும் வரை கடல் உள்வாங்கி இருப்பதனை நன்றாக காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மணல்திட்டுகளும் ,பாறைகளும் தென்பட்ட நிலையில், சூரிய உதயம் வந்தபின்பு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதேபோல நேற்று மாலை 6 மணி அளவில் கடல் உள்வாங்க தொடங்கியது. இதனால் அப்பகுதி மீனவர்கள் மீண்டும் அச்சமடைந்தனர்.

2004-ஆம் ஆண்டு சுனாமிக்கு முன் கடல் இப்படித்தான் உள்வாங்கி இருந்ததாகவும், அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இப்போது கடல் உள்வாங்கியதானால் கரையோரம் வசிக்கும் மக்கள் தூக்கமில்லாமல் எச்சரிக்கையுடன் விழித்திருக்கின்றன.

பொதுவாக அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் கடல் உள்வாங்குவது இயல்பான ஒன்றாகும்.ஆனால் ,இரண்டு நாட்கள் தொடர்ந்து இப்படி பார்ப்பதில்லை என்று, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நிலவி வரும் இந்த சூழலில் கடல் பகுதி மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது , இதனால் பாதிப்பை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை என கூறியுள்ளனர்.

author avatar
Parthipan K