அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்!

0
70

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்!
சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமைக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

அதனையடுத்து இந்த கோரிக்கை பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா அவர்கள் அனைவரும் ஒற்றை தலைமை கீழ் தான் கட்சியை நடத்தினார்கள்.

அதேபோல தற்பொழுதும் ஒற்றை தலைமை கொண்டு வரவேண்டும் என்று ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த ஒற்றை தலைமையை யார் ஏற்கப் போகிறார்கள் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் உள்ளது. அதற்கேற்ப பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் இருவருக்கிடையே தற்பொழுது மோதல் நிலவி வருகிறது.

ஒருபக்கம் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கோஷம் மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கோஷம் போடுவதுமாக உள்ளனர். இந்த சூழலில் இருவரும் தனித்தனியே அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதைப்போல பொது செயலாளர் பதவிக்கு வேறு ஒரு புதிய நபரை நியமிப்பது கட்சிக்கே துரோகம் செய்வது என்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

அதேபோல முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி என்பவரும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து இருவரும் விலக வேண்டும். புதிதாக வருபவருக்கு வழிவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் எங்கு பார்த்தாலும் அனல் பறக்கவிடும் வாக்கியங்கள் உடன் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பொது செயலாளர் பதவி இருவருக்கும் கிடைக்கக்கூடாது என்று பலர் கூறி வருகின்றனர்.

ஜெயலலிதா அவர்கள் மறைந்தாலும் அவர் மட்டுமே பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று பலர் விருப்பம் தெரிவிக்கின்றனர். தற்பொழுது அதிமுக நிர்வாகிகள் பலர் அம்மா நினைவிடத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாங்கள் பொதுச்செயலாளராக யாரையும் ஏற்க மாட்டோம், பொது செயலாளராக அம்மா ஒருவர் மட்டும்தான் என்று கோஷமிட்டனர். அந்தக் கூட்டத்தில் பல பெண்கள், அம்மா கட்சியை காப்பாற்றி விடுங்கள் என்றும் கோஷமிட்டனர்.

மேலும் சில நிர்வாகிகள் அந்த கூட்டத்தில் தீக்குளிக்க முயன்றனர். அதனால் அம்மா நினைவிடம் சற்று பரபரப்பாக காணப்பட்டது. பிறகு அங்கிருந்த போலீசார் முயன்றவர்களை மீட்டனர்.