சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்! 

0
112

சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்! 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலை வாசஸ்தலமான இங்கு மதியம் 12 மணியளவில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டுள்ளது.  இதையடுத்து 2 முதல் 3  வினாடிகள் நில அதிர்வை ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் உள்ள மக்கள் உணர்ந்தனர்.

வீடு,கடைகள்,மற்றும் நிறுவனங்களில் உள்ள பொருட்கள் குலுங்கின. கடை ஒன்றில் இருந்த பொருட்கள் அனைத்தும் லேசாக அதிர்வடைந்தது.  இது அங்கு பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. நில அதிர்வு ஏற்பட்டதும் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

ஏற்காடு சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு ஏற்காடு மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. ஏற்காட்டில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு சேலம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எந்தவித அதிர்வும் உணரப்படவில்லை. லேசான அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்த அதிர்வு குறித்து தகவலானது டெல்லியில் இருந்து தான் வர வேண்டும். தகவல் கிடைத்த பின்பு தான் இது நில அதிர்வா? என்று உறுதிப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

இந்த அதிர்வினால் கலக்கமடைந்த ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் என்ன நிகழுமோ என்று  மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.