திமுக கூட்டணியில் வெடித்தது சர்ச்சை! கூட்டணியில் பிளவை ஏற்படுத்திய முக்கிய கட்சி!

0
80

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடத்தப்பட்ட மாநாடு காரணமாக திமுக கூட்டணியில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மிகப்பெரிய மாநாடு நடத்துவது கடினம். ஆனாலும் இவ்வளவு செலவுகளை செய்து மாநாடு நடத்தியதற்கு காரணம் என்ன என்று விசாரணை செய்தபோது தங்களுடைய பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு ஒரு மாநாடு நடத்த இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

தமிழகத்திற்கு தேர்தல் நெருங்கிவரும் சமயம் என்பதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவில்லை . ஆனாலும் தொகுதி பங்கீடு என்பது அதிகாரப்பூர்வமற்ற வகையில், இடதுசாரிகளுக்கு 3 விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் என்று ஒதுக்குவதற்கு திமுக முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்குக் காரணம் என்னவென்றால், தனிச் சின்னம் வாங்குவதற்கு 5 சதவீத தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறை தான் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு தற்சமயம் அரசியல் கட்சிகளை பலமுறை செய்து இருப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாக, அவரவர் சேர்ந்த கூட்டணியில் இருந்து அதிகமான தொகுதிகளை கேட்டு வாங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இது ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து அவர் சற்று ஆடிப்போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சென்றமுறை மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் தனியாக ஒரு கூட்டணி அமைக்கப்பட்டதே ஸ்டாலின் தோல்விக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த முறை அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் ஸ்டாலின் கவனமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.