இந்த தேர்வுகளின் தேதி திடீர் மாற்றம்? தொடர்ந்து எழுந்து வரும் கோரிக்கைகள்! 

0
80
Sudden change in the date of these exams? Requests keep coming up!
Sudden change in the date of these exams? Requests keep coming up!

இந்த தேர்வுகளின் தேதி திடீர் மாற்றம்? தொடர்ந்து எழுந்து வரும் கோரிக்கைகள்!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள்  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கு பின் பணி ஆணை வழங்கப்படும் . மேலும்  கொரோன பரவல்  கடந்த 2 வருடங்களாக இந்த டெட் தேர்வு நடைபெறவில்லை. அதனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் இந்த  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்ககா  தகுதித்தேர்வு  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அந்த அறிவிப்பில்  பட்டதாரி ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் அனைவரும்  முதல் தாள் எழுத விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.  அதனையடுத்து ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் 2ம் தாள் எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களும் பெறப்பட்டது. தேர்விற்கான தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் TET முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திடீரென தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது.

TET 2022 முதல் தாளுக்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனெனில் TET முதல் தாள் தேர்வு நடைபெறும் நாளன்று இந்து அறநிலையத்துறை தேர்வு நடைபெறுவதற்கு தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் TET மற்றும் இந்து அறநிலையத்துறை இந்த இரண்டு தேர்வையும் ஒரே நாளில் நடத்தினால், ஏதாவது ஒரு தேர்வை விண்ணப்பதாரர்கள் எழுத முடியாத நிலை ஏற்படும். அதனால் தேர்வர்களின் நலன் கருதி தமிழக ஆசிரியர் தேர்வாணையம் TET முதல் தாள் தேர்வு தேதியை மாற்றியமைக்க கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.

author avatar
Parthipan K