வங்கிகள் வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் திடீர் மாற்றம்! பண பரிமாற்றம் முற்றிலும் முடக்கம்!

0
161
Sudden change in days of bank strike! Money transfer is completely blocked!
Sudden change in days of bank strike! Money transfer is completely blocked!

வங்கிகள் வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் திடீர் மாற்றம்! பண பரிமாற்றம் முற்றிலும் முடக்கம்!

மும்பையில் கடந்த 13 ஆம் தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது.மேலும் வரும் ஜனவரி 28 ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை என்பதால் விடுமுறை நாள்கள்.அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கபடுவது வழக்கம்.

அதற்கு அடுத்ததாக 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் மொத்தம் நான்கு நாட்கள் வங்கி சேவைகள் முழுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.மேலும் தற்போது பொங்கல் பண்டிகையின் பொழுது தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் மூடப்பட்டதினால் பொதுமக்களின் பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த நிலையில் நேற்று முதல் தான் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது. அடுத்த பத்து நாட்களில் மீண்டும் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் மூடபட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படையும்.பணம் பரிமாற்றம் செய்வதில் சீரமம் ஏற்படும் என கூறப்படுகின்றது. போராட்டத்தின் பொழுது தொழில்,வர்த்தக நிறுவனங்கள்,சிறு தொழில் செய்வோர் என பலரும் பாதிப்படைவார்கள்.

மக்கள்  ஏ.டி.எம் சேவையை பயன்படுத்தினாலும் அவை முழுமையாக அளவு செயல்படும் என்பது கேள்வி குறிதான். வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் தற்போது வரையிலும் நிறைவேற்றவில்லை. ஊழியர்கள் குறைவான அளவில் இருபதினால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கபடுகின்றது. அதனால் தேவைக்கேற்ப ஊழியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K