வீட்டில் இருக்கும் பொட்டு கடலையில் இப்படி ஒரு மகத்துவமா?? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!!

0
122

வீட்டில் இருக்கும் பொட்டு கடலையில் இப்படி ஒரு மகத்துவமா?? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!!

நாம் தினம்தோறும் உண்ணும் உணவில்லையே நமது உடலில் ஏற்படும் வியாதிகளை குணப்படுத்தும் மருந்து உள்ளது. அவ்வாறு நம் வீட்டில் இருக்கும் ஒரு பொருள் தான் பொட்டுக்கடலை. இது பல்வேறு நோய்களுக்கு தீர்வாக உள்ளது.

அந்த வகையில் பொட்டுக்கடலை நாம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும். பொட்டுக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்த உதவும். 100 கிராம் பொட்டுக்கடலையில் 355 கலோரிகள் உள்ளது. இதில் நார்ச்சத்து மட்டும் 16.8 கிராம் உள்ளது.

பொட்டுக்கடலை சாப்பிடுவதால் எலும்புகள் மற்றும் நரம்புகள் வலுப்பெறும் தன்மையை அதிகரிக்கும். அதிக அளவு ஆற்றலை பயன்படுத்தக்கூடிய நபர்கள் பொட்டுக்கடலை சாப்பிட்டால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் புரதம் நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வரிசையில் பொட்டுக்கடலையை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிடலாம்.

அதேபோல உடைத்த கடலையை சாப்பிடுவதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் நிவர்த்தி ஆகும். அதுமட்டுமின்றி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு பொட்டுக்கடலைக்கு உள்ளது.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையானது உடைத்த கடலை பருப்புக்கு உள்ளது. அதுமட்டுமின்றி தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் கடலை நல்ல தீர்வு.

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பொட்டுக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை வெகுவாக குறையும்.