காங்கிரஸில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்பு! கட்சியில் மாற்றம் கொண்டுவர திட்டம்!!

0
73

காங்கிரஸில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்பு! கட்சியில் மாற்றம் கொண்டுவர திட்டம்!!

உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப் மாநிலத்தையும் அது இழந்தது.

இதையடுத்து உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தோல்வியின் காரணமாக,  கட்சியை மறுசீரமைப்பு செய்வதற்காக அந்த ஐந்து மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யும்படி சோனியா காந்தி அறிவுறுத்தினார். சோனியா காந்தி உத்தரவிட்டதை அடுத்து ஐந்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து ஐந்து மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆராய ஐந்து மாநிலத்துக்கும் ஐந்து மூத்த தலைவர்களை சோனியா காந்தி நியமித்து உள்ளார். மேலும் இந்த ஐந்து மாநிலங்களிலும் அமைப்பு ரீதியான மாற்றங்களை செய்யுமாறும் சோனியா காந்தி அவர்களிடம் கூறியுள்ளார்.

இநிலையில், கட்சியை  மறுசீரமைப்பு செய்ய கட்சியின் அமைப்பு தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் அந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸின் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான பூபிந்தர்சிங் ஹூடாவை, ராகுல் காந்தி சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களை சோனியா காந்தி டெல்லியில் சந்தித்து பேசினார். அதுபோல் உத்தரபிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளை பிரியங்கா காந்தி தனித்தனியாக சந்தித்து பேசினார்.

தேர்தலில் காங்கிரஸ் அடுத்தடுத்து சந்தித்து வரும் தோல்வியாலும், காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்புகளாலும் விரைவில் காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்படும் என சொல்லப்படுகிறது.

author avatar
Parthipan K