திருமணத்திற்கு சுபமுகூர்த்தம் பார்க்கும்போது நிச்சயம் இந்த 4 விஷயங்களையும் கவனியுங்கள்!

0
60

திருமணத்திற்கு என்று சுபமுகூர்த்த நாள் குறிக்கும் பொழுது கூடுதலாக 4 முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள், நேரம், உள்ளிட்டவை குறிக்க வேண்டும்.

அதாவது முகூர்த்தகால் நட, மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம் குறிப்பது, பெண் அழைப்பிற்கு நேரம் குறித்தல், திருப்பூட்டுதல் என சொல்லப்படும் நான் சூடும் நேரம் மற்றும் சாந்தி முகத்திற்கான நேரம் உள்ளிட்டவை சரியாக குறைக்கப்பட வேண்டும்.

இதில் பெண் அழைப்பதற்கான நேரம் குறிக்கும் பொழுது வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டிலிருந்து பெண்ணை அனுப்ப அனைவரும் யோசிப்பார்கள். அதே நேரம் மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்.

குறிப்பாக லட்சுமி என்ற அடிப்படையில் பெயரமைந்த பெண்களுக்கு வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் அழைப்பு நடத்திக்கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.

நல்ல சுப ஓரை பார்த்து சாந்திமுகூர்த்தம் நடத்தினால் ஆண் வாரிசுகள் பிறக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

அதேசமயம் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களின் வழிபாடு உள்ளிட்டவற்றை முடித்துக்கொண்டு அதன்பிறகு சாந்தி முகூர்த்தம் நடத்தினால் மற்றவர்கள் போற்றும் வகையில் பிறக்கும் குழந்தை வாழ்க்கையில் உயரும்.