நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் படியுங்கள் !! முக்கிய தகவல்

0
87

 

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நாடு முழுவதும் நடக்க இருக்கிறது.இந்த தேர்வானது கடந்த மே மாதமே நடக்கவிருந்த நிலையில் கொரோனா முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, நாளை நடக்க இருக்கிறது..இந்தத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்த நிலையிலும் ,எதிர்ப்பையும் மீறி நாளை தேர்வு நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடக்க உள்ளது. இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் 3,842 மையங்களில் சுமார் 15,97,433 மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர் .தமிழ்நாட்டில் இந்த தேர்வு மையங்கள் மொத்தம் 238 அமைக்கப்பட்டு ,அதில் 1, 17,990 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் முன்பே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சிலருக்கு தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் ,மாணவர்களுக்கு இடையே குழப்பம் நிலவி வருகிறது.

இந்த குழப்பமானது குறிப்பாக தமிழகத்தில் உள்ள வேலூரில் 2 தேர்வு மையங்கள் மாற்றப்பட்டு இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தகவல் குறுஞ்செய்தி வாயிலாக வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

தேசிய தீர்ப்பு முகமை மாணவர்களுக்கு வழங்கும் அறிவுரை :

  • நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் மாஸ்க், கையுறை ,முகத்தை மறைக்கும் ஷ்ல்ட் அணிந்து வரவேண்டும்.
  • ஜீன்ஸ் ,சல்வார், நீளமான ஸ்கர்ட், டி-ஷர்ட், ஷார்ட்ஸ் ஆகியவற்றை அணிந்து வரலாம் .லூசான ஆடைகள் அணிந்து வரவேண்டும்.
  • தேர்வுக்கு முழுக்கை சட்டை, பெரிய பட்டன் கொண்ட சட்டைகள் மற்றும் அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணிந்து வர கூடாது என்றும், கட்டாயம் ஷூ அணிந்து வரக்கூடாது, என்றும் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.மாற்றாக செருப்பு அணிந்து வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
  • நகைகளை அணிந்து வரக்கூடாது என்றும் மதம் சார்ந்த நகைகளையும் அணிந்து வர கூடாது என்று தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
  • தலையில் ஸ்காட் மற்றும் தலைப்பாகை அணிந்து வரலாம் என்றும் ஆனால் பரிசோதிக்கப்பட்ட அவர்கள் வாட்ச் என்ன காரணம் கொண்டும் அணிந்து வரக்கூடாது என்று கூறியுள்ளது.

தேர்வுக்கு முக்கியமாக எடுத்த வர வேண்டிய பொருட்கள் :

  • முக்கியமாக ஹால் டிக்கெட் எடுத்து வர வேண்டும் மற்றும் அரசு வெளியிட்டிருக்கும் போட்டு ஐடி கார்டு, PwD சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
  • தேர்வை எழுதுவதற்கு பால்பாயிண்ட் பென்தான் பயன்படுத்த வேண்டும்.
  • தேர்வு மையங்களில் தண்ணீர் பாட்டில் வைக்கப்பட்டு இருக்காது என்பதால் அருந்துவதற்கு தண்ணீர் பாட்டில் கொண்டு வரலாம் என்றும் ஊடுருவல் போன்றதாக பாட்டில் இருக்க வேண்டும். சானிடைசர் கொண்டு வரலாம்.

எடுத்து  வர கூடாத பொருட்கள் :

  • செல் போன், ப்ளூடூத் போன்ற தகவல் பரிமாற்றம் விதமான கருவியையும் எடுத்து வரக்கூடாது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
  • பைகள், சிறு தீனிகள், புத்தகம் உள்ளிட்ட எடுத்து வரக்கூடாது என்றும் எந்த காரணம் கொண்டும் கைநாட்டு ஹால் டிக்கெட்டில் வைக்கக்கூடாது என்றும் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு தேர்வு முகமை கூறும் அறிவுரை:

  • மையங்களுக்கு செல்லும் முன்னரே உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படும் என்றும் அதில் 99.4டிகிரி மேல் இருந்தால் ,20 நிமிடம் தனியாக அமர வைக்கப்படுவார்கள். பின்னர் உடல் வெப்பநிலை குறையவில்லை என்றால் தனி அறையில் வைத்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிந்து தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேர்வினை முடித்ததும் ஹால் டிக்கெட்டில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை சரியாக பூர்த்தி செய்து தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் . தேர்வு எழுத வரும் மாணவர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Parthipan K