இவர்களுக்கெல்லாம் ஆப்சென்ட் போடப்படும்:! அண்ணா யுனிவர்சிட்டி வைத்த செக்! அதிர்ச்சியில் இறுதியாண்டு மாணவர்கள்!

0
74

இவர்களுக்கெல்லாம் ஆப்சென்ட் போடப்படும்:! அண்ணா யுனிவர்சிட்டி வைத்த செக்! அதிர்ச்சியில் இறுதியாண்டு மாணவர்கள்!

கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகள் முடக்கபட்டிருக்கும் நிலையில்,அனைத்து பள்ளி பொதுத் தேர்வுகள்,
இறுதியாண்டை தவிர்த்து அனைத்து கல்லூரி பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.ஆனால் கல்லூரி இறுதி பருவத்தேர்வு நடத்தியே ஆகவேண்டும் என்று யுஜிசி அமைப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி 3 மணிநேரம் நடக்கவேண்டிய தேர்வுகள்,1 மணி நேரத்தில் 30 கேள்விகளுடன் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த வாரம் இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியதாவது,
பொறியியல் இறுதி பருவத்தேர்வு முறையாக எழுதாமல்,டீக்கடையில் அமர்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும்,தேர்வு எழுதியவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

 

 

 

 

author avatar
Pavithra