உயிரை கூட பொருட்படுத்தாத மாணவிகள்! அரசு பேருந்தில் இப்படியா இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

0
220
students-who-do-not-even-care-about-life-the-video-is-going-viral-on-the-government-bus
students-who-do-not-even-care-about-life-the-video-is-going-viral-on-the-government-bus

உயிரை கூட பொருட்படுத்தாத மாணவிகள்! அரசு பேருந்தில் இப்படியா இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கப்படும் என அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வருடங்களாகவே பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்கின்ற நேரத்திற்கு அதிகப்படியான அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அந்தக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பல மாவட்டங்களில் இந்த நேரங்களில் வரும் பேருந்துகள் போதுமானதாக இல்லை. அதனால் காலை மற்றும் மாலை நேரத்திற்கு வரும் ஒரு பேருந்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் வேலை ஆட்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு ஏறி செல்கின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறைவான அரசு பேருந்துகளால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பலரும் நெறித்துப் பிடித்தபடி ஆபத்தான நிலையில் பேருந்தின் படியில் பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ராணி அண்ணா கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவிகள் பலரும் கூடுதல் பேருந்து இல்லாத காரணத்தால் உயிரை கூட பொருட்படுத்தாமல் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டுமென ஒரே பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடியே செல்கின்றனர்.அரசு பேருந்துகள் காலை நேரத்தில் கூடுதலாக இயக்கினால் இந்த ஆபத்தான நிலை ஏற்படாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

author avatar
Parthipan K