மாணவர்களுக்கு மடிகணினி திட்டம் கிடையாதா ?  ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! 

0
65
Students don't get computer program? The report published by Ramadoss!
Students don't get computer program? The report published by Ramadoss!

மாணவர்களுக்கு மடிகணினி திட்டம் கிடையாதா ?  ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.  மேலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில்  தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ள நிலையில் அரசு பள்ளியில் மேல் நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இலவச மடிகணினி  திட்டம் தற்போது இன்னும் தொடங்கப்படவில்லை அதனால் மாணவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் இருந்து வருகின்றனர்.

மேலும் 2021 – 2022-ம் கல்வி ஆண்டில் மற்றும் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் இலவச மடிக்கணினிகள் வழங்கிருக்க  வேண்டும் ஆனால் நடப்பாண்டில் மேலும் ஐந்தரை லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும் இன்றைய கல்வி செல்லும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் மிகவும் அவசியமானதாக ஒன்றாக உள்ளது.

அரசு பள்ளியில் பெரும்பாலும் ஏழை மாணவர்களே படித்து வருகின்றனர்.  அவர்கள் உயர்கல்வி செல்லும் பொழுது விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடப்பாண்டில்  நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால் இத்திட்டம் கைவிடப்படுமோ என்ற அச்சம் அனைவரும் மனதில் எழுந்துள்ளது. மேலும்   அத்தகைய நடவடிக்கை எடுக்க  தமிழக அரசு மேற்கொள்ள கூடாது எனவும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிகணினி   வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K