கல்லுரி  மாணவர்கள் இனி பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்!! தமிழக அரசு உத்தரவு!!

0
107
College students can now travel on buses free of charge !! Tamil Nadu government order !!
College students can now travel on buses free of charge !! Tamil Nadu government order !!

கல்லுரி  மாணவர்கள் இனி பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்!! தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மு க ஸ்டாலின் அவர்கள் திமுகவின் தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை ஒன்றொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதன்படி கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் நான்காயிரத்த்தை இரண்டு தவணையாக பிரித்து வழங்கப்பட்டது. மேலும் கோரோனா நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைகாரர்களுக்கும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு பயணக் கட்டணம் இல்லை என்ற திட்டத்தையும் நிறைவேற்றியது.

 

இதையடுத்து மாதம் தோறும் வீட்டு தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் சென்னையில் உள்ள மாநகர பேருந்து போக்குவரத்து கழகங்களில் கட்டணமின்றி பயணிக்க அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்பயிற்சி மையங்கள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்தது.

 

இந்த நிலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்து பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. தொழிற் பயிற்சி நிலையங்களில் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் ஆகஸ்ட் மாதம் வரை கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய பயண அட்டை அச்சிட்டு வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு இந்த  முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author avatar
Preethi