மாணவரை சுட்டுக்கொன்ற விஜய்யும் கழிவறையில் வழுக்கி விழுவாரா? நீதிமன்றம் அறிவுரை

மாணவரை சுட்டுக்கொன்ற விஜய்யும் கழிவறையில் வழுக்கி விழுவாரா? நீதிமன்றம் அறிவுரை

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் என்ர பகுதியை 19 வயது பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் என்பவரை அவரது நண்பர் விஜய் சமிபத்தில் சந்தித்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்டு கொன்றார். முகேஷின் நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைய விஜய் தலைமறைவானார்.

இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கையை அடுத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்த விஜய்யை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் விஜய் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் அதே நேரம் இளைஞர் விஜய் கழிவறையில் வழுக்கி விழாதவாறு பார்த்துக்கொள்ள போலீசுக்கு நீதிபதி அறிவுரை கூறினார்.

கடந்த சில மாதங்களாகவே போலீசார்களிடம் சிக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கழிவறையில் வழுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டுடன் தோன்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்தே நீதிபதி, காவல்துறைக்கு இதுபோன்ற அறிவுரையை வழங்கியுள்ளதாக தெரிகிறது

Copy
WhatsApp chat