Connect with us

Breaking News

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு.. அடித்து கொல்லப்பட்ட மாணவன்..!

Published

on

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் நவதிக் (18). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.சம்பவதன்று விடுதியில் உள்ள கல்யாண் என்ற மாணவருக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினர்.

Advertisement

அப்போது நவதிக் மற்றும் நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில், நவதிக் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் விடுதியில் உள்ள மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement