எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை! விண்ணப்பிங்க கடைசி நாள் இதுவே!

0
111
Student Admission to MGR Film College! This is the last day to apply!
Student Admission to MGR Film College! This is the last day to apply!

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை! விண்ணப்பிங்க கடைசி நாள் இதுவே!

தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பாடப் பிரிவானது நான்காண்டு கால பட்டப் படிப்பாகும்.2022-23 ஆம் கல்வியாண்டில் நான்காண்டு கால பட்டப் படிப்பிற்காக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளங்கலை காட்சிக்கலை ஒளிப்பதிவாளர் Bachelor of visual Arts (Cinematography)மற்றும் இளங்கலை  காட்சிக்கலை  எண்மிய இடைநிலை Bachelor of visual Arts (Digital Intermediate): பட்டப் படிப்புக்கு மேல்நிலையில் இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறப்பு பாடமான புகைப்படம் சார்ந்த தொழில் படிப்புகள்/ அதற்கு இணையான படிப்புகள்/ மின்னியல் மற்றும் மின்னணுவியல்(EEE) அல்லது மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியல்(ECE) ஆகிய பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளங்கலை காட்சிக்கலை ஒலிப்பதிவு Bachelor of visual Arts (Audiography): பட்டப்படிப்பிற்கு மேல்நிலையில் இயற்பியல் மற்றும் வேதியியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறப்புப் படமாக வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது உள்நாட்டு மின்னணு உபகரணங்கள் சார்ந்த தொழில் படிப்புகள்/ அதற்கு இணையான படிப்புகள்/EEEஅல்லது ECE ஆகிய பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு) – Bachelor of visual Arts (Film Editing)

இளங்கலை சிக்கலை இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல் Bachelor of visual Arts (Direction and Screenplay writing)இளங்கலை காட்சிகளை உயிர்ப் பூட்டல் மற்றும் காட்சிப் பயன் Bachelor of visual Arts (Animation and Visual Effects) : பட்டப் படிப்புகளுக்கு மேல்நிலையில் மேல்நிலை கல்வியில் ஏதேனும் ஒரு பகுதியில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in மற்றும் www.cior.tn.gov.in எனும் இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் – ரூ.80/- (சாதி சான்றிதழின் நகல் இணைக்கப்பட வேண்டும்).
பிற வகுப்பைச் சார்ந்தவர்கள் – ரூ.200/

முதல்வர் (பொறுப்பு).
தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்
சி. ஐ. டி. வளாகம்,
தரமணி,
சென்னை 600 113
24.06.2022க்கு முன்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
24.06.2022 முதல் 22.07.2022 வரை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.07.2022 மாலை 5.00 மணிக்குள்.

 

author avatar
CineDesk