குழந்தைளுக்கு நோய் எதிர்ப்புசக்தி அளிக்கும் உணவு!! இனி மருந்து, மாத்திரைலாம் தேவையே இல்ல!!

0
76

உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைப்பதற்கு தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. மேலும், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்றவற்றை விரட்டி அடிக்கும் உணவுகளில் இது ஒன்றாகும். வைட்டமின் சி அதிகம் நிறைந்து இருக்கும் காரணத்தால் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை இது வளப்படுத்தும்.

தேங்காய் பாலில் போதுமான ஊட்டச்சத்து உள்ளது. இதன் காரணமாக இது எலும்புகளை வலுப்படுத்துகிறது. பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மாங்கனீசு குறைபாட்டால் நீரிழிவு நோய் ஏற்படும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்து உள்ளதால் இதன் காரணமாக நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

மேலும் இது சாப்பிடுவதன் மூலம் வேகமாக பசி அடங்கும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து. செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகும். தேங்காய் பாலில் இது அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கீல்வாதம் இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மேலும் ரத்தக் கொதிப்பை எண்ணி கவலைப்படுபவர்கள் பொட்டாசியம் கலந்த உணவை எடுத்துக் கொண்டால், பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். பொட்டாசியம் அதிகம் தேங்காய் பாலில் இருப்பதன் காரணமாக இது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.

மேலும் உடம்பில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது .புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை இது குறைக்கும். தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலமாக முகம் பளபளக்கும் மற்றும் மினுமினுக்கும். மேலும் இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

author avatar
Jayachithra