ஸ்டிரைக் வாபஸ்.. தொலைதூர அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!

0
107
Strike returns .. Long distance government buses start service!
Strike returns .. Long distance government buses start service!

ஸ்டிரைக் வாபஸ்.. தொலைதூர அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!

புதுச்சேரியில் ஆறு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தின் பிறகு இன்று முதல் தொலைதூர அரசு பேருந்துகள் படிப்படியாக இயங்குகின்றன. இருப்பின் நகர பேருந்துகள் முழுமையாக இருக்கவில்லை. தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையே டைமிங் பிரச்சனை காரணமாக பெரும் தகராறு நேர்ந்தது. இதனால் சிலரையும் தாக்கினர். இதன் காரணமாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆறு நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. பேருந்து நிறுத்தத்தின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பெரும் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரப்பிரியங்காவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஏற்கனவே நடந்த தகராறு காரணமாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தாக்கியவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த டைமிங் பிரச்சனையை குறித்து மீண்டும் தனியார் பேருந்து ஊழியர்கள் தகராறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

மேலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது அரசு பேருந்துகளை இயக்கவிடாமல் தடுத்தற்காகவும், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட 12 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். இவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கையை குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை முடிவு செய்யாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை புதுச்சேரியில் இருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, நாகப்பட்டினம் போன்ற தொலைதூர பேருந்து சேவைகள் படிப்படியாக இயக்கப்படுகின்றது இதனால் நகரப்பேருந்து முழுமையாக இயங்கவில்லை இருப்பினும் தமிழக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

author avatar
CineDesk