இத்தாலியில் நீடிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்

0
129

இத்தாலியில் அண்மை நாள்களில் அங்கே கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இரவுக் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றுவந்த இளையர்களே அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. குரோஷியா, கிரீஸ், மால்ட்டா போன்ற நாடுகளுக்கு அதிகமானோர் சென்று வந்ததும் அதற்கு மற்றொரு காரணம். கோடைக்காலம் முடிந்து, இம்மாதமும் அடுத்த மாதமும் பயணிகள் வரத்தொடங்குவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய கிருமிப்பரவல் காரணமாக உள்நாட்டுப் பயணிகளே பிற நகரங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். எனவே, வெளிநாட்டுப் பயணிகளின் வருகை குறித்த நம்பிக்கை குறைந்து விட்டது.

ஏற்கெனவே வந்த வெளிநாட்டுப் பயணிகளும் அவசரமாக வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது. அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கு இன்னமும் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பிலிருப்பதால், பயணத்துறை மீள அதிகக் காலம் பிடிக்குமென அஞ்சப்படுகிறது. பயண வழிகாட்டிகள், டாக்சி ஓட்டுநர்கள், ஹோட்டல் ஊழியர்கள் எனப் பல தரப்பினரும் இந்தப் பருவத்துக்கான பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்கள் இப்போது, மாற்று வேலைகளைத் தேடிவருவதாகப் பயணத்துறை நிறுவனம் ஒன்று குறிப்பிட்டது.

author avatar
Parthipan K