வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு! காரணம் என்ன? அச்சத்தில் பொதுமக்கள்!

0
67
திருச்சி நகர வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு! வடமாநில கொள்ளையர்களா? பொதுமக்கள் அச்சம்!
திருச்சி நகர வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு! வடமாநில கொள்ளையர்களா? பொதுமக்கள் அச்சம்!

வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு! காரணம் என்ன? அச்சத்தில் பொதுமக்கள்!

சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் ஒரு செய்தி அனைவரையும் கலக்கம் அடையச் செய்தது. வட மாநிலத்தில் இருந்து பல கொள்ளையர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும் காலை நேரங்களில் படுக்கை விரிப்புகள் விற்பவர்கள் போலும் மற்றும் வேறு ஏதேனும் பொருட்கள் விற்கும் வியாபாரிகள் போலும் நோட்டமிட்டு, பெண்கள் இருக்கும் வீடுகள், யாரும் இல்லாத வீடுகள், வெகுநாட்களாக பூட்டியிருக்கும் வீடுகள் என அந்தந்த வீடுகளில் குறியீடுகளை விட்டு சென்று விட்டு பின்னர் இரவு நேரங்களில் அந்த வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்து வந்தனர் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் அச்சமடைய வைத்தது.

அந்த வகையில் தற்போது  திருச்சி மாவட்டம் துறையூரில் வீடுகளின் முன்பு மர்ம குறியீடு இருப்பதால், இது கொள்ளையடிப்பதற்கான அடையாளமா? என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

துறையூரில் உள்ள பெரியார் நகர் மற்றும் சாமிநாதன் நகர் பகுதியிலுள்ள தெருக்களில் பொதுவாக ஆள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இப்பகுதி​யில் பூட்டியிருக்கும் வீடுகள் மற்றும் அடிக்கடி வெளியூர் செல்பவர்களின் வீடுகளை மர்ம நபர்கள் கண்காணித்து, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்‍கு முன்பு சாமிநாதன் நகரில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தான் பெரியார் நகரில் வசித்து வரும் வழக்கறிஞர் ரபிக் என்பவர் வீட்டில் வித்தியாசமாக வட்ட குறியீடு குறிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதே தெருவில் வசிக்கும் மற்றொருவர் வீட்டிலும் இதை போன்ற குறியீடு குறிக்கப்பட்டுள்ளது. இவை வடமாநில கொள்ளையர்கள் வரைந்துள்ள குறியீடாக இருக்‍கலாம் எனவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்‍கள் அச்சமடைந்துள்ளனர். இதனையயடுத்து அங்கு பொதுமக்‍கள் அச்சமின்றி நடமாட காவல்துறையினர் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

author avatar
CineDesk