விசாரணையை தடை செய்க! மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்!

0
85

சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண வழக்கை விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 2753 சதுர அடி அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறதாம். அதில் நீதிபதி விசாரணை நடத்துவதற்கான அறை 702 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளதாம். அதோடு மட்டுமல்லாமல் நீதிபதி ஓய்வு அறை, அலுவலகம், விசாரணைக்கு வருவோர் காத்திருக்கும் அறை, உள்ளிட்டவைகளுக்கு அமைக்கப்பட இருக்கிறது.

சற்றேறக்குறைய ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஆறுமுகசாமி ஆணையம் என்ற புதிய விசாரணை அறையிலே கேக் வெட்டி கொண்டாடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதோடு இன்னும் இருபது வருடங்கள் ஆனாலும் கூட ஆறுமுகசாமி ஆணையத்தால் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கின்ற மர்ம முடிச்சை அவிழ்த்து விட இயலாது. அதேபோல எந்த ஒரு குற்றவாளியையும் அவரால் கண்டுபிடித்து விட இயலாது என்றும், தெரிவிக்கிறார்கள்.

சிவாஜி கணேசன் நடிப்பில் தாதாமிராசி இயக்கத்தில் வெளியான புதிய பறவை திரைப்படம் பார்த்திருப்போருக்கு தெரியும். அந்த திரைப்படத்தில் தன்னுடைய மனைவி சவுகார் ஜானகியை கொலை செய்திருப்பார் சிவாஜிகணேசன். அதற்கு ஆதாரமே இருக்காது குற்றவாளியே நான்தான் என் மனைவியை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் கொடுப்பதுடன் படம் முடியும். அதே போல ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் தாமாக முன்வந்து நாங்கள்தான் கொலை செய்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி சரணடையவில்லை என்றால் தற்போது விசாரித்துக் கொண்டிருக்கும் விசாரணை ஆணையத்தால் எதையுமே கண்டு பிடித்து விட இயலாது என்றும் தெரிவிக்கிறார்கள்.

இத்தனை வருட கால விசாரணையில் அந்த ஆணையம் பெரிதாக எதையாவது கண்டுபிடித்து இருக்கிறதா? இந்த ஆணையம் விசாரணை நடத்தும் வரையில் அரசின் பணம் வீணாக செலவழியும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் இந்த விசாரணை ஆணையத்தின் விசாரணையை முழுமையாக கைவிடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உள்ளிட்ட நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு தொடர்ந்து வருகிறது.ஆனால் அதனை நீதிமன்றங்கள் பெரிதாக கருதவில்லை.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை நிச்சயமாக நடைபெற வேண்டும் என்று இந்த இரண்டு நீதிமன்றங்களும் அடித்துக் கூறி விட்டனர்.

அனைவரும் அமைதியாக இருக்கின்ற சூழ்நிலையில், அந்த மருத்துவமனையின் நிர்வாக மட்டும் எதற்காக விசாரணையை தடைசெய்யவேண்டும் என்று தெரிவிக்க வேண்டும் எனவும் ஒரு சிலர் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.அத்துடன் மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்றும் ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள்.