QR code ஐ பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது எப்படி! முழு விவரம் இதோ!

0
100

டிஜிட்டல் உலகத்தில் இன்டர்நெட் பேங்கிங் துவங்கி தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற யுபிஐ வரையில் நாம் நிதி பரிவர்த்தனைகளை கையாளும் முறைகள் பல பரிமாணங்களையும் பெற்றிருக்கிறது. கையில் காசு இல்லாவிட்டால் கூட மொபைலில் இருக்கும் பேமன்ட்ஸ் ஆப்களை நம்பி தெருவோரம் விற்கும் பாணி பூரி சாப்பிடுவது முதல், ஷாப்பிங் மாலில் விற்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது வரையில் யூபிஐ பலருக்கும் உதவிகரமாக இருந்து வருகிறது.

ஒருவேளை தங்களுக்கு அவசரமாக ரொக்க பணம் தேவைப்படுகிறது ஆனால் தங்களுடைய கையில் ஏடிஎம் கார்டு இல்லை என்றாலும் கூட யுபிஐ உதவும் என்பது மிகப்பெரிய வரம் அல்லவா ஆம் நம்முடைய கையில் பணம் இல்லை என்றாலும் பேமென்ட் செய்ய உதவும் கையில் தங்களுக்கு பணமாக தேவை என்றால் அதற்கும் உதவும் இந்த அம்சத்திற்கு Interoperable cardless cashwithdrawal (ICCW) என்று பெயர் ஏடிஎம் கார்டுகள் இல்லாவிட்டாலும் கூட ஏடிஎம் சென்டருக்கு சென்று பணம் எடுக்க உதவும் ஐசிசி டபிள்யூ அம்சத்தை வழங்க நாட்டின் அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி ஊக்குவித்து வருகிறது.

இதற்குக் காரணம் குளோனிங் ஸ்கின்னிங் போன்ற கார்டு மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தப்பிக்க இந்த அம்சம் மிகப்பெரிய உதவியாக இருக்கும். எஸ்பிஐ, ஹச் டி எப் சி, பி என் பி உள்ளிட்ட நாட்டின் பல முன்னணி வங்கிகளின் ஏடிஎம் சென்டர்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் ஆப்ஷன் இருக்கிறது. இதன் மூலமாக நீங்கள் பயன்படுத்தும் கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே உள்ளிட்ட எந்த ஒரு யுபிஐ பேமென்ட் சர்வீஸ் ப்ரோவைடர் ஆப் மூலமாகவும் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

பயனர்களின் கையில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் இல்லாத நிலையில், பணத்தை எடுக்க உதவும் வெளியில் செல்லும்போது அவசரத்தில் கையில் பணம் மற்றும் கார்டுகள் எடுத்துச் செல்ல மறக்கும் போது அல்லது கார்டுகளை தொலைத்துவிட்ட சூழ்நிலையில், இருப்பவர்களுக்கு ஒரு டென்ஷன் இல்லாத அனுபவத்தை இந்த iccw அம்சம் வழங்கும்.

இந்த அம்சத்தை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான வரம்பு தற்போது 5000 ரூபாயாக இருக்கிறது. ஏடிஎம்களிலிருந்து யுபிஐ மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கு வங்கியில் கூடுதல் கட்டணம் வசூலிக்காது. பேமெண்ட் ஆப்களை பயன்படுத்தி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க உதவும் வழிகளை தற்போது காணலாம்.

முதலில் தங்களுக்கு இருக்கும் ஏடிஎம் சென்டர்களுக்கு சென்று அங்கு இருக்கும் மிஷினின் தொடுதுறையில் காட்டப்படும் ஆப்ஷன்களில் இருந்து வித்ட்ரா கேசை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு ஏடிஎம் மிஷினின் தொடுத்துறையில் காட்டப்படும் யுபிஐ ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.

இதன் பின்னர் குறிப்பிட்ட ஏ டி எம் தொடுதிரையில் ஒரு கியூ ஆர் கோடு காட்டப்படும்.

தற்போது தங்களுடைய கைபேசியில் இன்ஸ்டால் செய்து வைக்கப்பட்டிருக்கின்ற யுபிஐ அடிப்படையிலான ஆப்களில் ஒன்றை தேர்வு செய்து க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்த உடன் 5000 ரூபாய் வரம்பிற்குள் தங்களுக்கு தேவைப்படும் தொகையை என்டர் செய்யவும்.

அதன் பின்னர் தங்களுடைய யுபிஐ பின்னை என்டர் செய்து proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும். தற்போது குறிப்பிட்ட மெஷினில் இருந்து நீங்கள் என்டர் செய்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.