ஒருவருடம் வீட்டிலேயே இருங்கள் உங்களுக்கு சம்பளம் தருகின்றோம்! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்!

0
108
Stay at home for a year and we will pay you! The government released a crazy plan!
Stay at home for a year and we will pay you! The government released a crazy plan!

ஒருவருடம் வீட்டிலேயே இருங்கள் உங்களுக்கு சம்பளம் தருகின்றோம்! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்!

ஐக்கிய அரபு அமீரக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அவரவர்களுக்கென சொந்த தொழில் தொடங்குவதற்கு விரும்பினால் ஒரு வருடம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு கொண்டுவந்துள்ளது. அரசின் துறை சார்ந்த தலைவரே இந்த விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவார் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசு ஊழியர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும் நிறுவனங்களை நடத்துவதற்கும் யுஏஇ அரசு உதவும் என தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த திட்டத்தின் மூலம் பல புதிய நிறுவனங்களும் பல்வேறு வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் அதனால் அந்நாட்டு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டதாக ஐக்கிய அரபு அமீரக அரசின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் பாதி ஊதியமும், வேலை உறுதியுடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த இளைஞர்கள் புதிய தொழில் நிறுவனங்களை தொடக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என தெரிவித்தனர்.மேலும் இந்த திட்டமானது 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K