தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

0
113
Statue stolen 50 years ago from Thanjavur district found in US
Statue stolen 50 years ago from Thanjavur district found in US

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கால சம்ஹார மூர்த்தி சிலையை மீட்பதற்கு அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆவணங்களை அனுப்பி உள்ளனர்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, முத்தம்மாள் புரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சொந்தமான கால சம்ஹார மூர்த்தி உலோக சிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் போரின் பேரில் கடந்த 2020ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தொன்மையான உலோக சிலை திருடப்பட்டு போலியான சிலை வைக்கப்பட்டது உறுதி செய்தனர்.

இதனை அடுத்து இந்த சிலை அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டி என்கிற ஏல நிறுவத்தில் இருப்பதாகவும் சிலை கடத்து தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.சிலையை மீட்பதற்கு உரிய ஆவணங்களை தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள காலசமார மூர்த்தி சிலை தமிழக கோவிலில் இருந்து திருடப்பட்டது தான் என்பதற்கான ஆவணங்களும், தற்போது வைத்துள்ள சிலை போலியானது என்பதற்கான ஆவணமும், சிலை திருடப்பட்டது தொடர்பாக இந்து அறநிலை துறை சார்பில் அளிக்கப்பட்ட புகார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கிறிஸ்டி ஏல நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஏல நிறுவனத்திடம் உள்ள சிலை தமிழக அரசுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சிலை கடத்த தடுப்பு பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.