புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலக் கல்விக் கொள்கை குழு – முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன்!!

0
116
#image_title

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில் மாநிலக் கல்விக் கொள்கை குழு செயல்படுவதாக, குழுவில் இருந்து விலகிய முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன் குற்றச்சாட்டுக்கு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மாநில கல்வி குழு உருவாக்கம் குறித்தும், அதன் தலைவர் குறித்தும், குழுவில் இருந்து விலகிய முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்த நிலையில், மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவின் உறுப்பினர்கள் அருணா ஜெகதீசன், சீனிவாசன், ஜெய்ஸ்ரீ தாமோதரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளை மறுத்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அறிக்கையில் குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், வெளிப்படுத்தன்மையின்றி செயல்படுவதாகவும் பேராசிரியர் ஜவகர்நேசன் வைத்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

அரசு அதிகாரிகள் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க பணிகளில் தலையிடுவதாக வைத்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள குழு உறுப்பினர்கள் கல்வி சார்ந்த திட்டங்களை மட்டுமே அரசு அதிகாரிகளுடன் விவாதித்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில் குழு செயல்படுவதாக பேராசிரியர் ஜவகர்ணேசன் வைத்த குற்றச்சாட்டை மறுத்துள்ள குழு உறுப்பினர்கள் , புத்தக சார்ந்த கல்வியாக மட்டுமல்லாமல் மாணவர்கள் மனிதநேயம், சமூக நீதி உள்ளிட்டவற்றையும் உயர்த்தி பிடிக்கும் வகையில் தமிழகத்தில் நலன் சார்ந்து புதிய மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழுவில் இருந்து விலகிய பேராசிரியர் ஜவகர் நேசன் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளையேர தனது அறிக்கையில் வெளியிட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

author avatar
Savitha