துருக்கியில் இன்று மீண்டும் தொடங்குகிறது! மிகுந்த எதிர்பார்ப்பில் உலக நாடுகள்!!

0
80

துருக்கியில் இன்று மீண்டும் தொடங்குகிறது! மிகுந்த எதிர்பார்ப்பில் உலக நாடுகள்!!

போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையே இதுவரை மூன்று கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஒன்றில் கூட எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் போனது. இதனையடுத்து உக்ரைன், ரஷியா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கடந்த மார்ச் 10-ம் தேதி துருக்கியில் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதிலும் போர் நிறுத்தம் தொடர்பாக சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயான போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்தை கடந்தும் உக்ரைன் மீதான போரை ரஷியா தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடர ரஷியா முன்வர வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் துருக்கியில் இரண்டாவது கட்டமாக இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். அதன்படி இன்று நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தை புதன்கிழமை வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை உக்ரைன் மந்திரி ‘டேவிட் அரகாமியா’ தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே துருக்கியில் நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், இந்த முறை துருக்கியில் நடைபெற உள்ள உக்ரைன், ரஷியா நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K