நட்சத்திரங்களின் தலை தீபாவளி கொண்டாட்டம்! தயாராகி வரும் பிரபலங்கள்!

0
101
Star-Headed Diwali Celebration! Celebs getting ready!
Star-Headed Diwali Celebration! Celebs getting ready!

நட்சத்திரங்களின் தலை தீபாவளி கொண்டாட்டம்! தயாராகி வரும் பிரபலங்கள்!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளின் ஒன்று தான் தீபாவளி.அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி இந்த மாதம் 24ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.மேலும் புதிதாக திருமணமான ஜோடிகளுக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி தான்.அந்த வையில் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் கோலிவுட்டின் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்ச்சத்திரங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

விக்னேஷ் சிவன் –நயன்தாரா

இயக்குனர் விக்கேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு இந்த தலை தீபாவளியானது இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.அதற்கு காரணம் கடந்த வாரத்தில் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது தான்.

ஆதி- நிக்கி கல்ராணி  

கோலிவுட்டில் புகழ் பெற்ற சில படங்களில் நடித்து வந்தவர்கள் தான் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி.இவர்கள் இருவரும் இணைந்து மரகதநாணயம் என்ற படத்தில் நடித்திருகின்றனர்.அந்த படத்தில் தான் இவருகளுக்கிடையே காதல் மலர்ந்தது.அதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பிறகு பாரிஸ்க்கு ஹனிமூன் சென்று வந்தனர்.இந்நிலையில் தற்போது தலை தீபாவளி கொண்டாடவுள்ளனர்.

ரவீந்தர்-மகாலட்சுமி

கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ரவீந்தர் மகாலட்சுமி.இவர்களின் திருமணம் நயன் விக்கி திருமணத்திற்கு அடுத்தது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.இவர்கள் இருவருக்கு இது இரண்டாவது திருமணம் தான்.இந்நிலையில் தலை தீபாவளி நெருங்கி வருவதால் ஹனிமூன் செல்லாமல் தீபாவளிக்கு தயாராகி வருகின்றனர்.மேலும் இவர்கள் வரிசையில் புகழ் பென்ஸி ,சித்து ஸ்ரேயா,மதன் ரேஷ்மா ,ஆர்யன் ஷபனா,இயக்குனர் ஜஸ்டின் பிரபாகர் ,பிகில் நடிகை காயத்ரி ,அஜய் கிருஷ்ணா ஜெர்சி ,என அனைத்து நட்சத்திரங்களும் தலை தீபாவளிக்காக தயாராகி வருகின்றனர்.

author avatar
Parthipan K