சூறாவளி பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின்! ஆளும் தரப்பு வியப்பு!

0
64

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேர்தலுக்கு இன்னும் ஐந்தே மாதங்கள் தான் இருக்கின்றன.

இதன் காரணமாக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள். அதிமுகவில் இருந்த குழப்பங்கள் ஒரு முடிவுக்கு வந்தபிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

திமுக கூட்டணியில் தேர்தலை சந்திப்பதற்காக வியூகங்களை பயன்படுத்தி வருகின்றார்கள் சென்ற பத்து வருடங்களாக திமுக ஆட்சியில் இல்லாத காரணத்தால், இம்முறை எப்படியாவது ஆட்சியில் அமர்ந்து விட வேண்டும் என்று திமுக தலைமைக்கு உறுதியாக இருக்கின்றது.

கொரோனா தொற்று அரசியல் அரசியல் கட்சிகளின் வேகத்தை தடுத்து விட, அதிலிருந்து அரசியல் கட்சிகள் மீண்டு வராமல் இருந்த நிலையில், இப்போது கொரோனா வேகம் தமிழ்நாட்டில் சற்று குறைந்து காணப்படுவதால், அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் யாத்திரைகள் என்று அரசியல் கட்சி அனைத்தும் சுறுசுறுப்பாக இருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு திட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை திமுக கட்சி முன்னெடுத்து இருக்கின்றது இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு மு க ஸ்டாலின் பல மாவட்டங்களில் முப்பெரும் விழாக்கள் நடத்தி அதில் காணொளி மூலமாக கலந்து கொண்டதை அடுத்து தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கின்றது.