நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்! முதல்வரை காப்பியடித்த ஸ்டாலின்!

0
64

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்டார். அதன்பிறகு உரையாற்றிய அவர் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை வாங்கி இருக்கின்ற நகை கடன்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார். அதேபோல கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கியிருக்கும் கடன்கள் அனைத்தும் மொத்தமாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அதிமுக ஆட்சியில் எந்த ஒரு முடிவும் கட்டவில்லை என்று ஆதங்கம் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக நேற்றையதினம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய ஸ்டாலின், கோயம்புத்தூர் மாவட்டத்தை கொள்ளையடிப்பதற்காக அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குத்தகைக்கு விட்டு இருக்கிறாரா? என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

பாலம் கட்டினால் மட்டுமே பணம் சம்பாதிக்க இயலும் என்ற காரணத்தால், தேவையற்ற பகுதிகளில் எல்லாம் பாலம் கட்ட தொடங்கியிருக்கிறார்கள். முதல்வரும் அமைச்சர் வேலுமணி அவர்களும் என்று தெரிவித்திருக்கிறார்.

அரசை விமர்சனம் செய்தால் கைது நடவடிக்கை பாயும், மிரட்டல் விடுக்கப்படும், பொய் வழக்கு போடப்படும் என்று தெரிவித்தால், வேலுமணியின் அவங்களுக்கு முடிவே கிடையாதா? அமைதிக்கு பெயர் போன கோயம்புத்தூர் மாவட்டம் கொந்தளிக்கும் நகரமாக தற்சமயம் மாறி இருக்கிறது. இதற்கு காரணமான வேலுமணி அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள் என்று தெரிவித்திருக்கிறார் மு க ஸ்டாலின்.