இதுதான் திராவிட மாடல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

0
123

திமுகவின் இளைஞரணி சார்பாக சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அறிவாலயம் கலைஞர் அரங்கில் கருத்தரங்கு மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை ஆரம்ப விழா நடந்தது.

இதில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து மேடையில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, நான் இளைஞரணி செயலாளராக பதவி ஏற்று முதல் நிகழ்ச்சி கலைஞர் அரங்கத்தில் இளைஞர் அணி சார்பாக நடத்தப்படுவதால் பெருமையாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் முன்னேற்றக்கழகத்தில் 25 லட்சம் உறுப்பினர்களை புதிதாக இணைத்துள்ளீர்கள் அதில் 4 லட்சம் பேர் 2 முறை பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே 21 லட்சம் பேர் தான் புதிதாக பதிவு செய்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

பயிற்சிப்பாசறையை உங்கள் பகுதியில் அரங்கத்தை உண்டாக்கி கூட்டம் கூட்டினால் போதும் இளைஞர் அணியினர் பெரியளவில் கூட்டங்களை நடத்த வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

வெறும் 100 பேரை வைத்து சிறிய அளவில் கூட்டங்களையும் நடத்தினால்தான் திமுகவின் கொள்கைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும், கூட்டம் நடத்துவதன் உண்மையான பலன் அப்போதுதான் கிடைக்கும் என்று தெரிவித்தார். அதோடு தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு திராவிட மாடல் பயிற்சி நடக்கும் என கூறினார்.

உறுப்பினர் சேர்க்கையில் முதலில் ஆய்வு செய்து அதன் பிறகு அடையாள அட்டை வழங்கப்பட்டு அதன் பிறகு வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்படும், புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

திமுகவிற்கு மாற்று பாஜகதான் என்று தெரிவிக்கிறார்கள், அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளை பாஜக கபளீகரம் செய்வதாக தெரிவிக்கிறார்கள்.

அது தொடர்பாக அரசியல் புரிதலுடன் நாம் இருக்கவேண்டும். ஒட்டுமொத்த தமிழர்களையும் திமுகவின் பக்கம் ஈர்க்கும் நோக்கத்துடன் நாம் செயல்பட வேண்டும் என்றும், அவர் கூறியிருக்கிறார்.

பெரியார், அண்ணா, கலைஞர். பேராசிரியரின் எழுத்துக்கள் நம்மிடம் இருக்கின்றன. கூடுதலாக திராவிட மாடல் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் நம்முடைய தலைவரின் சாதனைகளும் இருக்கின்றன. நம்முடைய கொள்கைகளை மற்றும் சாதனைகளை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் நம்முடைய பணி.

அதற்கான பாசறையை தான் தற்போது தொடங்கியிருக்கிறோம் என்னை சின்னவர் என்று அழைத்தார்கள் ஆம் உங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நாள் சின்னவன் தான் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், மோடிக்கு கிளாஸ் எடுத்தவர் நம்முடைய தலைவர் மோடியை மேடையில் அமர வைத்துவிட்டு மாநில தேவை தொடர்பாக கோரிக்கை வைத்தார்.

மோடிக்கு மேடையில் இருக்கும்போது கோரிக்கை வைத்த ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் தான். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார்.