மத்திய பட்ஜெட் கொந்தளித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! காரணம் இதுதானாம்!

0
71

தமிழ்நாட்டில் விவசாயிகள் உடைய விருப்பத்துக்கு விரோதமாக மட்டுமே நாங்கள் நடப்போம் என்று பாஜக பிடிவாதமாக இருக்கிறது அந்த பிடிவாதத்தின் ஒரு பகுதிதான் இந்த பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது அதன் காரணமாக, எல்லா கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. எல்லா கட்சிகளையும் சார்ந்தவர்களும் தன்னுடைய எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ,சென்னை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது பாஜக என்று விமர்சனம் செய்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். ஏற்கனவே கொரோனா பாதிப்பால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து வருத்தத்தில் இருந்துவரும் விவசாயிகளுக்கு உதவிகள் எதுவும் செய்யாமல், இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது அவர்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு சமமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின். அதேபோல தமிழ் மொழியின் வளர்ச்சி தடுக்கப்பட்டு இந்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் விரைவில் தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழகத்திற்கு அந்தத் தேர்தலை மனதில் வைத்து பல சலுகைகளை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் தமிழக அரசியல் கட்சிகளின் தொடர்ச்சியான இதுபோன்ற விமர்சனங்களால், உண்மையிலேயே மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு சிறப்பு சலுகை கொடுத்திருக்கிறதா அல்லது அது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் தமிழக பாஜக தலைவர் முருகன் அவர்கள் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை மத்திய அரசு கொடுத்திருக்கிறது என்று பாராட்டு தெரிவித்து இருக்கிறார் என்ற விஷயம் குறிப்பிடத்தக்கதாகும்.