காதலர் தினத்தை கறுப்பாக்கிய காவல்துறையை கண்டிக்கிறேன்! ஸ்டாலின் ஆவேசம்!!

0
72

காதலர் தினத்தை கறுப்பாக்கிய காவல்துறையை கண்டிக்கிறேன்! ஸ்டாலின் ஆவேசம்!!

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய இசுலாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை ஸ்டாலின் கண்டித்து பேசியுள்ளார். பிப்ரவரி 14 காதலர் தின இரவை கறுப்பாக்கிய போலீசாரை கண்டிக்கும் வகையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

CAA, NRC, NCR ஆகிய மூன்று சட்ட திருத்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இசுலாமியர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். தமிழக உடனடியாக இதனை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டம் தீவிரம் அடைந்த காரணத்தால் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். கூட்டம் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசாருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடியை நடத்தி, 100 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். பின்னர், போராடிய இஸ்லாமிய அமைப்பினருடன் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சு வார்த்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வதாக கூறப்பட்டதை அடுத்து கூட்டம் கலைந்து சென்றது. இருப்பினும் சிலர் மீண்டும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். இவர்களிடம் காவல்துறையினர் மீண்டும் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: ஜனநாயக ரீதியாக போராடியவர்களை திட்டமிட்டு தடியடி நடத்தியதாகவும், அமைதியின் வழியில் போராடிய மக்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை தாக்கியுள்ளதாகவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

author avatar
Jayachandiran