பத்திரிக்கையாளர் கொலையில்! ஆளும் தரப்பை பற்றி ஸ்டாலின் கூறிய கருத்தால் சர்ச்சை!

0
60

சமூக விரோத கும்பலால் , தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கொடூரத்தை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் பத்திரிக்கை ஊடகங்களின் கழுத்தில் அரசு கேபிள் கயிறு சுற்றப்பட்டு அவர்களின் தவறுகளை அம்பலப்படுத்தும் ஊடகங்களை பயமுறுத்தும் நெருக்கடி தந்து நடவடிக்கை எடுப்போம், என்று மிரட்டுவதும் ஆதரவாக குரல் கொடுத்தால், அந்த நடவடிக்கையை தளர்த்துவதும், கண் ஜாடை காட்டுவதும், தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

அதன் ஆரம்பமாக சமூக விரோத கும்பலால், தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தனியார் தொலைக்காட்சி சார்ந்த மோசஸ் என்ற செய்தியாளர் சென்னை குன்றத்தூர் அருகே நடைபெற்று வருகின்ற, சமூக விரோத செயல்கள் மற்றும் போதை பொருள் விற்பனை போன்றவற்றில் வெளிக்கொண்டு வந்து பொதுமக்களின் கவனத்திற்கு காட்டியதால், மிரட்டலுக்கு ஆளானார்.

இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அதோடு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டை விட்டு வெளியே வரச்சொல்லி பேசிக்கொண்டிருக்கும்போதே அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள்.

மோசஸ் அவர் சத்தம் கேட்டு அவருடைய தந்தை வீட்டை விட்டு வெளியே வந்த போது அந்த கும்பல் ஓடி விட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த மோசஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். என தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த படுகொலைக்கு என்னுடைய மிகக் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் இந்த கொடூரத்தை நடத்தியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

கஞ்சா வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தும் சமூக விரோத கும்பளுக்கும், எடப்பாடி அதிமுக அரசுக்கும், அதன் காவல்துறையினருக்கும், பாதுகாப்பு அளிப்பது பத்திரிக்கையாளர்கள், மற்றும் ஊடகத்தினர் உடைய உயிர் பறிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதும், ஜனநாயகத்தின் மீது விழுந்து கொண்டு இருக்கக்கூடிய சம்மட்டி அடியாக இருக்கின்றது

பத்திரிக்கை சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் அவர்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.