முதல்வருக்கு பட்டமளித்த எதிர்க்கட்சி தலைவர்!

0
68

தன்னை அறிக்கையின் நாயகர் என்று விமர்சனம் செய்த முதல்வர் பழனிச்சாமியை ஊழல் நாயகர் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் தன்னை பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார் எனவும் விமர்சனம் செய்திருந்தார் அதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அரசின் மீது குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் முதல்வர்.

இந்த நிலையில் இன்றைய தினம் கொளத்தூர் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் இந்த ஆட்சியில் நடக்கும் அவலங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறினால் முதல்வருக்கு கோபம் வந்துவிடுகிறது எதிர்க்கட்சியினருக்கு வேறு வேலையே இல்லை அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு வேறு என்ன வேலை இருக்கின்றது ஆளுங்கட்சியில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவரான என்னுடைய வேலை என்று தெரிவித்திருக்கின்றார் ஸ்டாலின்.

  • அறிக்கையின் நாயகர் என ஒரு பட்டத்தையும் கொடுத்திருக்கின்றார் முதல்வர். அந்த படத்தினை நான் ஏற்றுக்கொள்கின்றேன் எனக்கு பட்டம் கொடுத்த அவருக்கு நான் ஒரு பட்டம் கொடுக்க வேண்டாமா கரப்ஷன் நாயகர் கலெக்சன் நாயகர் ஊழல் நாயகர் இதுதான் நான் அவருக்கு கொடுக்கும் பட்டம் என்று தெரிவித்திருக்கின்றார் ஸ்டாலின்.[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]