விமர்சிப்பவர்கள் தகுதியுடன் இருக்க வேண்டும்! ஸ்டாலின் காட்டமான பேச்சு!

0
70

என்னை விமர்சனம் விமர்சிப்பது பற்றி நான் கவலைப்படவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெட்கி தலைகுனிந்து, பெயரோ, அல்லது முகவரியோ, தன்னைப்பற்றிய அடையாளம் எதையும் வெளியிட திராணியற்ற, சில திரைமறைவு தில்லுமுல்லு செய்யும் ஆட்களால், தமிழ்நாட்டின் தெருக்களில் சில சுவரொட்டிகள் ஓட்டப்படுகின்றன.

சட்டப்படி அந்த போஸ்டர்களில் இருக்கவேண்டிய அர்ச்சகர் தன்னுடைய முகவரியும் இல்லை ஊழல் கொள்ளைகளில், ஈடுபடுபவர்கள் கொடுப்பவர்கள், வாங்கிக் கொள்வார்கள், என பெயரை புதைத்து வைத்து இருப்பார்கள் அல்லவா? அதை போல எடப்பாடியை புகழும் வாசகங்களுடன் எதிர்க்கட்சித் தலைவரான என்னை இகழ்ந்து இன்னொரு பக்கமும், அந்த வாசகங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.

என்னை விமர்சிப்பதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை ஆனாலும், ஜனநாயகத்தின் விமர்சனம் ஆரோக்கியமானதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்னை விமர்சிப்பவர்கள் விமர்சனம் செய்வதற்கு உரிய தகுதி இருப்பவராக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்பவன் நான்.

தகுதி அற்றவர்களால் , போகிற போக்கில் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ, எனும் நோக்கில் இத்தகைய சுவரொட்டிகளை ஒட்டி வைத்திருப்பது அவற்றில் இடம் பெற்றிருக்கின்ற வாசகங்களில் இருந்து தெரிய வருகிறது.

முகவரியற்ற அடையாளம், மற்றும் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டால், அதன் வழியாக ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் வைத்து அதனை உடனடியாக தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கின்றது.

அதோடு அந்த கடமையானது காவல்துறைக்கும், மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும், இருக்கின்றது.

ஆனாலும் இதுபோன்ற சுவரொட்டிகளை ஒட்டியவர்கள், மேல் இதுவரை கைது செய்யவோ அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதிலிருந்து, ஆட்சியில் இருப்பவரின் அதிகாரத்தோடும் ஆதரவோடும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். இந்திய குற்றவியல் சட்டம், புத்தகங்கள் பதிவுச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், ஆகியவற்றின் கீழ் தண்டனை கொடுக்கத்தக்க குற்றங்கள் இவை.என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.