திமுகவின் முக்கிய வாரிசுக்கு முற்று புள்ளி வைத்த பிகே டீம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
62

திமுக சங்கர மடம் இல்லை என அன்று வாரிசு அரசியலுக்காக காரணம் வழி சொன்ன அதே வார்த்தையை என்ற பிரசாந்த் கிஷோர் கையிலெடுத்து இருக்கின்றாரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

நேருக்கு நேராகவே திமுக தலைவர் ஸ்டாலின் இடம் வாரிசு அரசியல் முன்னெடுப்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கைக்கு சீனியர் தலைவர்கள் தங்களுடைய அதிருப்தி காரணமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கோள்காட்டி ஒரு வேகத்தடை வைத்திருக்கிறார்கள் ,என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

திமுக சங்கர மடம் இல்லை என ஒரு காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருந்தார், அரசியல் கட்சிகளின் வாரிசுகள் பதவிக்கு வருவதை விமர்சிக்கும் வகையில் அந்த கருத்து இருந்தது.

ஆனால் அவருடைய மனநிலை அவருக்கு பதவி வந்தவுடன் மாறிப்போனது கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் ஸ்டாலினுக்கு பின் உதயநிதி என வாரிசுகளை களம் இறக்கி இருக்கிறார்கள்.

திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல என தெரிவித்த அதே கருணாநிதி தான் பின்னாளில், எனக்குப்பின் திமுகவை வழிநடத்த போகின்ற ஸ்டாலின் அவர்களே என தொண்டர்கள் முன்பாக வார்த்தைகளை தெரிவித்து ஆரவாரத்தையும் ஸ்டாலினுக்கு ஆதரவாளர்களையும் பெருக்கினார் கருணாநிதி மறைவுக்கு பின்னர் மு க ஸ்டாலின் திமுக தலைவர் என்ற பொறுப்பை ஏற்றார்.

ஆரம்பகாலத்தில் பெரிதாக விமர்சிக்கப்படாத நிலையில் இப்போது உதயநிதி ஸ்டாலின் கட்சிக்குள் வந்தபின்னர் அதிகமாகவே வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார் .

இதன் காரணமாக கட்சி நிர்வாகிகள் தலைவர் ஸ்டாலினிடம் ஒரு விஷயத்தை சொல்வதைவிட நேராக பிரசாந்த்கிஷோரிடமே தெரிவித்து விடுவார்களாம். இதுபோன்ற ஒரு சூழலில் இன்னொரு தகவலும், பிரசாந்த் கிஷோர் காதுக்கு சென்றிருக்கிறது.

கட்சியில் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் தருவதற்காகவே, அவருக்காக ஒட்டப்படும் சுவரொட்டிகளில் கூட தீவிர கவனம் செலுத்தப்படுகின்றது. எப்படியாவது தலைவரிடம் நல்ல பெயரை வாங்கி விட வேண்டும் என்பதற்காகவே, இதுபோன்ற முயற்சிகள் நடந்து வருகின்றன ஆனால் சமூக வலைதளங்களில் இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

கட்சியின் மரியாதை இதன் வழியாக குறைவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. என்கின்ற முறையில் பிரசாந்த் கிஷோர் இந்த விவகாரத்தை ஸ்டாலினிடம் எடுத்துச்சொல்ல அதனை மிகப் பொறுமையாக கேட்டுக் கொண்டாராம் ஸ்டாலின். அதனால் தான் திமுக முப்பெரும் விழா நிகழ்வுகளில் கூட உதயநிதியின் புகைப்படங்கள் பேனர்களில் இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.