வைத்த ஆப்பையே திருப்பி வைத்த அமைச்சர்! ஆடிப்போன எதிர்க்கட்சி தலைவர்!

0
76

திண்டிவனம் அருகே இருக்கின்ற
வானூர் பகுதியில் குவாரி டெண்டர் கொடுத்த விவகாரத்தில் மு க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கை திமுக உட்கட்சி பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கான முன்னோட்டம் என்று தெரிவித்திருக்கின்றார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கல்குவாரிகள் இருக்கின்றன அவற்றில் ஒரு குவாரி நடத்துவதற்காக வானூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின் மகனுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டெண்டரை இப்போது கனிம வளர்பிறை கவனித்து வரும் அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள்தான் ஒதுக்கீடு செய்தார். என்பது முக ஸ்டாலினுடைய புகார். ஒரு சட்டமன்ற உறுப்பினருடைய மகனுக்கு டெண்டர் கொடுத்ததில் முறைகேடு இருக்கிறது, ஆகவே சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அதிமுக எம்எல்ஏ சக்கரபாணியின் மகனுக்கு வழங்கப்பட்ட இந்த கல்குவாரியில் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

ஸ்டாலினுடைய இந்த அறிக்கைக்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் நேற்றைய தினம் பதிலளித்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது போன்றதுதான் சட்டப்படி தவறாகும். சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினராக ஏன் அமைச்சர்களாக இருக்க கூறி அவர்களின் குடும்பத்தாருக்கு கூட ஒரு சென்டர்களில் பங்கேற்கும் அரசுப் பணிகளை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே தான் இந்த டெண்டர் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றது. இது கூட தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசி இருந்தார் அவருடைய பாணியில் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னால், தேங்காய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுகின்றார். அவரை முதலில் மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் அறிக்கையினை அப்படியே வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள செல்லுங்கள். மக்கள் பிரதிநிதிகளின் உறவினர்கள் அரசு டெண்டர்கள் பங்கேற்கக்கூடாது என்று எந்த ஒரு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என ஸ்டாலின் அவர்கள் முதலில் விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு அவர் விளக்கம் அளித்து விட்டால், அடுத்த நொடியே நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன்.

ஆகவே அவர் சட்ட நிபுணர்களை அழைத்து டெண்டர் எடுக்க மக்களின் பிரதிநிதிகள் உடைய உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியே மக்கள் பிரதிநிதிகளின் உறவினர்கள் அரசு டெண்டர்கள் எடுக்கக்கூடாது என்று வைத்துக்கொண்டாலும் கூட திமுகவினருக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா/ திமுக ஆட்சியில் இருந்தபோது, விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் செம்மண் அல்ல அனுமதி பெற்றுத் தந்தது யார் வேறு யாரும் கிடையாது அப்போது அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி அவர் இப்போது எம்பியாக இருக்கின்றார்.

அதேபோல திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வரும் துரைமுருகனின் மருமகள் பெயரில் ஏராளமான மணல் குவாரிகள் வேலூர் மாவட்டத்தில் இருக்கின்றன. இதெல்லாம் அவருடைய கண்ணுக்கு தெரியாதா? மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் ஒரே தன்மை கொண்டவர்கள்தான். இந்த விஷயத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று எந்த ஒரு பேதமும் கிடையாது. ஆகவே துரைமுருகன், பொன்முடி, ஆகியோர் முதலில் பதவி விலகுமாறு அவர் அறிக்கை வெளியிடட்டும் அதன் பிறகு நானும் பதவி விலகுகிறேன்.எனக்கு தெரிந்தவரையில் நான் பதவி விலகவேண்டும் என்பதற்காக அவர் இந்த அறிக்கையை வெளியிடவில்லை.

நான் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தெரிவித்து, அவருடைய கட்சியை சார்ந்த துரைமுருகன் மற்றும் பொன்முடியை தான் பதவி விலக வேண்டும் என்று மறைமுகமாக தெரிவித்திருக்கின்றார். ஏனென்றால் இப்போது அண்ணா அறிவாலயத்தில் அதிகாரப் போட்டி நிலவுகின்றது. எதிர்க்கட்சித் தலைவரை கவிழ்க்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்து வருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு எனக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருப்பது போல் தெரிகின்றது. திமுக நிர்வாகிகளை தான் ஸ்டாலின் குறி வைத்திருக்கின்றார் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here